#15 இது ஒரு நிலாக்காலம் - டிக் டிக் டிக்

படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
யாரும் வந்து நடக்காத சாலை நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

#14 ஓ.. ப்ரியா ப்ரியா - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தைத் திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா

: ஆஆ.. ஆ.. ஆஆ.. ஆ..
ஆஆ.. ஆ.. ஆஆ. ஆ..
ம்.. ம்.. ம்..
ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
ஏழைக் காதல் வாழுமோ.. இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம்.. நானோர் ஓரம்.. கானல் நீரால் தாகம் தீராது
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ.. வானம் பூமி ஆவதோ..
காலம் சிறிது.. காதல் மனது.. தேவன் நீதான் போனால் விடாது
: தேடும் கண்களே.. தேம்பும் நெஞ்சமே..
வீடும் பொய்யடி.. வாழ்வும் பொய்யடி..
...

பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ.. பெண்மை தாங்குமோ
: ராஜ மங்கை கண்களே எங்கும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவியல்லவோ
பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ.. ஓ.. நீ வா வா..

: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
...

பெ: காளிதாசன் ஏடுகள்.. கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவமல்லவே
: ஷாஜஹானின் காதலி.. தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவந்தான் சாவும் வந்தது
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெ: விழியில் பூக்கும் நேசமாய்.. புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே.. இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன்.. கூட வா வா..

: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
: ஏக்கமென்ன பைங்கிளி.. என்னை வந்து சேரடி
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டிப் பூவை இங்காட
காதல் கீர்த்தனம்.. காணும் மங்களம்..
ப்ரேமை நாடகம்.. பெண்மை ஆடிடும்..
...

#13 எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் - குரு

படம்: குரு
இசை: இளையராஜா

பாடியவர்: எஸ்.ஜானகி


பா.. பபப பாபா.. பபப பாபாபா..
பப பாபா பாபா பாபப பாபா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பாபாபா.. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
...

ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ

எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
...

வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது.. வா..

எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் லாலல லாலா வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பபபா.. பாபா பாபா.. பாபா பாபா.. பாபா பாபா பா..

#12 உன்னை அழைத்தது கண் - தாய் வீடு

படம்: தாய் வீடு
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
...

பெ: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
: நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...

பெ: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
: நான் மயங்க.. தேன் வழங்க
நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெ: அரே.. உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...

#11 இந்த மான் உந்தன் - கரகாட்டக்காரன்

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...

: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
: என்னுயிரே
...

பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்.. இந்த மான்
: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே
...

#10 சிவராத்திரி தூக்கம் ஏது - மைக்கேல் மதன காம ராஜன்

படம்: மைக்கேல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: ஸ்.. இதுக்கெல்லாம் மொதல்ல மூட் க்ரியேட் பண்ணனும்..
ஆ.. இப்பப் பாரு..
ம்.. ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி
...

: வெப்பம் தீர வந்ததடி வேப்ப மரக்காத்து
ஆஹ்.. ஏஹ்.. ம்ஹூம்..
வச்சிக்குவோம் கச்சேரிய உச்சகட்டம் பார்த்து
ஓஹோ.. ஏஹே.. ம்ஹூம்
பெ: தெப்பம் போலத் தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து
: ம்.. ம்.. ம்ம்..
பெ: அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்தக் காட்டு
: ஓ.. ம்.. ம்ம்..
ராஜாமணி மாயமோகினி ரோஜாமலர் நீ
பெ: தேமாங்கனி தேவரூபிணி தேன் வாங்கலாம் நீ
: சுக ராத்திரி ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..

:சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
பெ: சிவராத்திரி
...

பெ: வெட்டி வேரு வாசனையத் தொட்டுத் தொட்டுப் பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு
: அர்த்தஜாம நேரத்திலே பூஜைகளை ஏற்று
பக்தனுக்குப் பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு
பெ: நூலாடையைப் போட்டு மூடினேன் பாலாடையைத்தான்
: ஆத்தாடியோ தேய்ஞ்சு போகுமா பார்த்தால் என்ன நான்
பெ: சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..

: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பெ: பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே..
பெ: முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
: சிவராத்திரி..
...

#9 பூவாடைக் காற்று வந்து - கோபுரங்கள் சாய்வதில்லை

படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, கிருஷ்ணசந்தர் & எஸ்.ஜானகி

ஆ2: ஊரெங்கும் மழையாச்சு.. தாளாத குளுராச்சு.. ராக்காலம் ஈரமாச்சு..
கனி கொண்ட கிளையுண்டு.. கிளையோடு கிளியுண்டு.. பசியாற நேரமாச்சு..
தனியான பூவுக்கு இலையொண்ணு துணையாச்சு.. ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு.. குளிர் விட்டுப் போயாச்சு. யாரிங்கு சந்நியாசி..
...

பெ: பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஆ.. ஹா..
பெ: பூவாடைக் காற்று : லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே : லலலலா
பெ: முந்தானை இங்கே : லலலலா
பெ: குடையாக மாறுமே : லலலலா
...

: பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பெ: காணாத பூவின் ஜாதி.. நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி.. என்ன சேதி
: இதுதானே மோகம் பெ: பபப்பா
: ஒரு பூவின் தாகம் பெ: பபப்பா
: உடையோடு நனையாதோ பூங்காவனம்

பெ: ஹோ.. பூவாடைக் காற்று : லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே : லலலலா
பெ: முந்தானை இங்கே : லலலலா
பெ: குடையாக மாறுமே : லலலலா
...

பெ: ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
: அம்பிகை தங்கை என்று கிள்ளுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜாச் செண்டு.. சூடு கண்டு
பெ: இரு கண்ணின் ஓரம் : பாபாப்பா
பெ: நிறம் மாறும் நேரம் : பாபாப்பா
பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்

: ஏ.. பூவாடைக் காற்று பெ: லலலலா
: வந்து ஆடை தீண்டுமே பெ: லலலலா
: முந்தானை இங்கே பெ: லலலலா
: குடையாக மாறுமே பெ: லலலலா
: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஹா..
&பெ: ஹா..
பெ: பூவாடைக் காற்று : லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே : லலலலா
பெ: முந்தானை இங்கே : லலலலா
பெ: குடையாக மாறுமே : லலலலா
...

#8 வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம்

படம்: உயர்ந்த உள்ளம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என்றும் அவள் ஆட்சியே..
வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ.. தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
ஆஆஆ..
...

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து.. ஆஹா.. பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாக்ஷியோ மீனாக்ஷியோ அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியேஹே.. ஹஹா..
...

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்காரக் கைவண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்.. சபாஷ்.. ஆஆஆ..
அ.. ஆ.. அ.. ஆ.. அ.. ஆ..

ஸரிகரிநிஸ கரிநிஸ கரிநிஸ
ஸகக கரிரி ரிநிநி நிதத தபமப
மபநிதமப நிதமப நிதமப
பநிநி நிதத தபப பமம மககரி
ஸாஸ ஸாஸாஸ ஸாஸ ஸாஸாஸ
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
ரீரி ரீரிரி ரீரி ரீரிரி
ரிகரிஸ ரிகரிஸ ரிகரிஸ ரிகரிஸ
பபபப மமமம தததத நிநிநிநி
ஸஸஸ நிஸத நிஸநி கரிஸ
நிநிநி தநிப மதநி ஸநித
ஆஹா.. ஆஹா.. ஆஹாஹாஹா..
பபப பபப ததத ததத நிநிநி நிநிநி ஸா
பபப பபப ததத ததத நிநிநி நிநிநி ஸா

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ.. நான் காணவே தேர் வந்ததோ
மங்கலம் பொங்கிடும் மந்திரப் புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. ஹஹஹா..
அடியேனின் குடி வாழ.. தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியேஹே
ஹா.. ஆ.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஆஹ் ஹோ..
...