# 42 உன்னைத் தொட்ட தென்றல் - தலை வாசல்

படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

: தலைவி உந்தன் கண்பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
பெ: உறங்கும்போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதோ உச்சி வேர்க்கிறேன்
: இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
ihikhik உன்னைக் கேட்கிறேன்

பெ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
: உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

பெ: உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
: பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
பெ: நீ பார்வையில் காதலன்.. பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

: ihikhik உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ஹூம்.. ihikhik
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
பெ: ihikhik
...

# 41 அதிகாலைக் காற்றே நில்லு - தலை வாசல்

படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
மாலை மேகம் சோலையாகும்
வானம் எங்கள் சாலையாகும்
தாமரை குடை விரிக்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
...

# 40 அட மச்சம் உள்ள மச்சான் - சின்ன வீடு

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜா

ஆ1: ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
பெ1: நான் அத்தினி
பெ2: நான் சித்தினி
பெ1: நான் பத்மினி
பெ2: நான் சங்கினி
...
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
பெ1: ஆ.. ரகசிய வரம்
பெ2: ஆ.. தருகிற மரம்
பெ1&பெ2: நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ2: நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா
...

பெ1: என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
பெ2: எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
பெ1: ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
பெ2: அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
பெ1: ராகுகாலம் போனது
பெ2: யோக நேரம் கூடுது
பெ1: பாரிஜாதம் வாடுது
பெ2: தாகசாந்தி தேடுது
பெ1: மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ
...

ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
ஆ1: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...

ஆ1: எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெ1: மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
பெ2: உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆ1: நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெ1: பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆ1: புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனன னா
...

# 39 ச்சூ ச்சூ மாரி - பூ

படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா & ஸ்ரீமதி

1: டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...

2: தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
...
3: ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
...
3: சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
4: போடீ மாரி
...

2: தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
...
2: பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
...
2: கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
3: கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
1: ஐயே.. சீ
2: ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

# 38ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே - பூ

படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்.. தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகித் தவிழ்ந்திடவே உனது மார்பைக் கேட்குதடா
பனியில் அது கிடக்கும்.. நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப் போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே
...

# 37 சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி - உள்ளே வெளியே

படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி சித்திரக் குட்டி வந்தது சுத்தி
பெ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
: கொஞ்சமா நஞ்சமா
பெ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

: மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழி மேலே படுத்தேனடி
ரயிலோடி வரும் முன்னே மயிலோடி வருமென்று
நினைத்தே அதுபோல நடித்தேனடி
பெ: நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்
வளைத்தாயே இள மானை வசமாகத்தான்
பல காலம் வலை போட்டு.. மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன் போல் மெதுவாகத்தான்
: காதல் வரும்போது காவல் எதுக்கு
பெ: ஏது இனிமேலும் ஊடல் வழக்கு
: காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா

: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

: இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்
மணித்தேரே உனக்காக வடம் போடவா
பெ: ஸ்..ஹா..
: இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர
பசும்பொன்னே உனைக் கொஞ்சம் புடம் போடவா
பெ: விரலாலே தொடலாமா.. நகக் காயம் படலாமா
இளசான திருமேனி அதைத் தாங்குமா
அலுக்காமல் சலிக்காமல்.. அணைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேனே இதழோரமா
: காயம் படக்கூடும் வேகம் பிறக்க
பெ: ம்.. கூச்சல் இடக்கூடும் நானும் தவிக்க
: பூவை ஒரு பூவும் என மெல்லப் பறிப்பேன்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஹா.. ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா

பெ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
பெ: கொஞ்சமா நஞ்சமா
: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
பெ: இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

# 36 கள்ளத்தனமாக கன்னம் வைத்த - உள்ளே வெளியே

படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஒரு மெத்தையிட்டுப் பக்கம் வரணும்
: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...

: கூடு விட்டுக் கூடு பாய வா.. ஆடிவிட்டு மீதி கூட வா
பெ: பாடிவிட்டு நீயும் கூட வா.. கோடி சுகம் நானும் கூறவா
: இன்ப ஜுரம்தான் ஏறுதே.. எல்லை வரம்பை மீறுதே
பெ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே

: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
...

பெ: பூத்திருந்து பூவும் வாடுதே.. பார்த்திருந்து நோவும் கூடுதே
: காத்திருந்து நேரம் போனதே.. காமனுக்கும் மோகம் ஆனதே
பெ: கண்ட கனவா.. காதலா.. காதல் தலைவா.. காவலா
: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே

பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
பெ: உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
: இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...