# 51 பூவே உன்னை நேசித்தேன் - பருவ ராகம்

படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 
: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா..
பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...

: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
பெ: ஓஹோ..
: ஹா..
பெ: ஆஹா..
: ஹா..
பெ: உண்மைதானா
: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது
பெ: நீயா
: ஆ..
பெ: சொன்னாய்
: ஆ..
பெ: மெய்யேதானா
: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ..

பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
...

பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
: கண்ணே உந்தன் எண்ணம் என்ன
பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது
: என்னைத் தந்தேன் இன்னும் என்ன
பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ..

: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...

# 50 காதலில்லை என்று சொன்னால் - பருவ ராகம்

படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி



: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
: இனி என்ன தடை வருமா

பெ: வாலிப நெஞ்சங்கள் : கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் : விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக : ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக : பழையது அழிக
பெ: புது யுகம் வருக : பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே

: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்
...

# 49 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள்

படம்: மெல்லப் பேசுங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & உமா ரமணன்



பெ: கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய்.. எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
...

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
...

: வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெ: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
: காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. ஆஆஆஆ..

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
...

பெ: அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
பெ: நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்

: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெ: ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
...

# 48 பூப்போட்ட தாவணி - காக்கிச் சட்டை

படம்: காக்கிச் சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
: கிண்ணம்... பெ: நான்
: என்னை... பெ: பார்
: இன்னும்... பெ: ஏன்
: உன்னை... பெ: தான்
: ராஜாத்தி.. ஆ
பெ: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
...

பெ: ராக்காலம் சேலை கேட்குதே... : ஹே ஹே ஹே ஹே
பெ: ராஜாவைப் பாதி ஆக்குதே... : பாப பாப பாப பாப
: பூவான மேனி எங்கும் போட்டாயே ஜலதரங்கம்
பெ: ஹா... : ஹோ
பெ: ஹா... : ஹா
பெ: கூந்தல் ... : ஆ ஆஆ ஆஆ
பெ: மூடும்... : ஒ ஒஓ ஒஓ
பெ: ஏக்கம்... : ஆஆ ஆஆ
பெ: கூடும்... : ஆஆ ஆஆ
பெ: ராஜாங்கமே... : ஆஹ்
பெ: ஹா ஆ...

: பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
: கிண்ணம்... பெ: நான்
: என்னை... பெ: பார்
: இன்னும்... பெ: ஏன்
: உன்னை... பெ: தான்
: ராஜாத்தி... பெ: ஆ..
பெ: பூப்போட்ட தாவணி... : ஆஆ...
பெ: போதையில்... : ஆஆ...
பெ: ஆடுதே
...

: மூடாத கோட்டை வாசலில்... பெ: ஹா ஹா ஹா ஹா
: நோகாமல் நோட்டம் பாக்கவோ... பெ: ஆ ஹா ஹா ஹா
பெ: காம்போடு பூத்த முல்லை... : தத்தூ
பெ: காயங்கள் பார்த்ததில்லை
: ஹேய்... பெ: ஹா... : ஆஹ்... பெ: ஹேய்
: மோகம்... பெ: ஆஹ்ஹா
: தீயில்... பெ: ஹா
: வேகும்... பெ: ஆஆ ஆஆ
: நீயும்... பெ: ஆஆ ஆஆ
ஆ: சேர்ந்தாட வா... ஹாஹ்
பெ: ஹா... ஹாஹ்ஹா

: பூப்போட்ட ஆஹ்... ஆஹ்... தாவணி போதையில் ஆடுதே
: கிண்ணம்... பெ: நான்
: என்னை... பெ: பார்
: இன்னும்... பெ: ஏன்
: உன்னை... பெ: தான்
: ராஜாத்தி... ஆ
பெ: பூப்போட்ட... :ஹை ஹை ஹா
பெ: தாவணி... : ஹா
பெ: போதையில்... : ஹா
பெ: ஆடு-&பெ: தே
...

# 47 பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா



பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்.. ம்.. ம்.. ம்..
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: பூபாளம் கேட்டேனே.. பொன்மானைப் பார்த்தேனே
பெ: பேசாமல் நின்றேனே.. பெண்ணென்று ஆனேனே
: கட்டளையிட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனையல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதமல்ல
பெ: நீ தொட்டதும் சுட்டது.. பட்டுடை விட்டது நானும் சொல்ல

: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

பெ.குழு: ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ..
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓ..

பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
: ஆறாது தீராது நீ வந்து சேராது
பெ: பெண்ணிவள் மேனியில் கண்ணிமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று
: புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று

பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்..
...

# 46 மாலைகள் இடம் மாறுது - டிசம்பர் பூக்கள்

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா


பெ
: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

: நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
பெ: தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்
: தாகங்கள்.. வரும் மோகங்கள்.. இனி தத்தளிக்கும்
பெ: ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்.. வெள்ளி முத்தெடுக்கும்
: ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்
சந்தம் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்

பெ: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
: மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

பெ: கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
: கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்
பெ: ஆரங்கள்.. பரிவாரங்கள்.. பல அற்புதங்கள்
: ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்.. எழில் சித்திரங்கள்
பெ: ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்
இங்கு பிறந்திடும்.. எங்கும் பறந்திடும்

: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
பெ: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

#45 சோலை புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை

படம்: இங்கேயும் ஒரு கங்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & பி.சுசீலா

பெ: ஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆ.. ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
கண்ணாளனைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

: ஓ.. ஓ.. ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ..
பெ: கண்ணா.. ஜோடிக் குயில் மாலையிடுமா.. இல்லை ஓடிவிடுமா
: கண்ணே.. நானிருக்க சோகமென்னம்மா.. கங்கை வற்றிவிடுமா
பெ: உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
: கல்யாணமா.. கச்சேரியா.. தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது.. கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
: என் தேவியைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

பெ: உன்னை மீறி ஒரு மாலை வருமா.. சொந்தம் மாறிவிடுமா
உள்ளம் காத்திருந்து இற்றுவிடுமா.. தன்னை விற்றுவிடுமா
: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பெ: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி
: காவலுக்கு நாதியில்லையா.. எந்நாளும் காதலுக்கு நீதியில்லையா

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
: என் தேவியைக் கண்டாலென்ன
பெ: என் வேதனை சொன்னாலென்ன
: நல்வார்த்தைகள் தந்தாலென்ன
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

#44 பூவண்ணம் போல நெஞ்சம் - அழியாத கோலங்கள்

படம்: அழியாத கோலங்கள்
இசை: சலீல் சௌத்ரி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & பி.சுசீலா



: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..

: ஆஹாஹா..
பெ: ஆஹாஹா..
...

பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை
: பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
பெ: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
...

: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
: இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
பெ: இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

: பூவண்ணம் போல நெஞ்சம்
பெ: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
ஹே.. ஏஹே.. ஹே.. ஏஹே..
...

# 43 பதினெட்டு வயது இளமொட்டு மனது - சூரியன்

படம்: சூரியன்
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: லலலா.. லல லலலலலா.. லலலா.. லல லலலலலா..
லல லலலா.. லா லலலா..
லல லல லாலா லாலா லாலா..
பெ: பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு.. பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு.. செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
...

பெ.குழு: தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..
தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..

: மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
போதும்.. போதும்.. நீ ஒதுங்கு
பெ: ம்ஹும்
: அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு
பெ: நான் விட மாட்டேன்.. தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
: ஹைய்யோ
பெ: இது கால தேவனின் கணக்கு
: கூசுது உடம்பு.. குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே.. ஹோ..
பெ: ஆஹ்.. கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
ராத்திரி.. நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட.. விருந்திட.. ஆசை விடுமா

பெ.குழு: சும்மா நின்னா மாமனைக் கண்டு தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமரை வெடிக்காதா
...
பெ: ஆ.. ஹாஆஆஆ ஆஆஆஆ.. ஆஹா..
&பெ: ஆஹா..
...

பெ: மாங்கனிச் சாறும்.. செவ்விளநீரும்
மாங்கனிச் சாறும் செவ்விளநீரும்
மேலும் கீழும்தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீயெடுக்க
: மூக்குத்திப் பூவே.. மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
பெ: மன்மத பாணம் பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு.. ஹோ..
: ihikhik மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள்.. எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

பெ.குழு: மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம்.. அச்சம்.. இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு
...

பெ: பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
: ம்..
பனி கொட்டும் இரவு.. பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
: :))
...