# 77 கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே இன்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏனில்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்குக் காவல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்குக் காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்தபடி கலங்குது மயங்குது பருவக் கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

# 76 சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

பெ: மாதுளம்பூவிருக்க.. அதற்குள் வாசனைத் தேனிருக்க
: பாதியை நானெடுக்க.. மெதுவாய் மீதியை நீ கொடுக்க
பெ: காதலன் கண்ணுறங்க.. தலைவி கூந்தலில் பாய் விரிக்க
: ஒரு புறம் நானணைக்க..
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஒரு புறம் நானணைக்க.. தழுவி மறு புறம் நீயணைக்க
பெ: சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ்க் கவியே.. சங்கத்தமிழ்க் கவியே
...

பெ: பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
: ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
பெ: காதலன் கைதொடத்தான்.. காதலன் கைதொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
: நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
பெ: தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

# 75 கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ.குழு: ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்..ம்.. ம்.. ம்.. ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
பெ: கண்ணா வருவாயா..
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
பெ.குழு: கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...

: ஆ.. நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்
பெ: உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
: கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துபோகும் பாற்கடல்
பெ: உன்னையிங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
: வேறில்லயே ப்ருந்தாவனம்
பெ: விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
: ஸ்வர்க்கம் இதுவோ

: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம் ம்.. ம் ம்ம்.. ம்ம் ம்.. ம் ம்ம்..
: மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
பெ: மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
: கொடியிடை ஒடிவடன் முன்னம் மடியிடில் எடுத்திடவா
பெ: மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
: இரவு முழுதும் உறவு மழையிலே
பெ: இருவர் உடலும் நனையும் பொழுதிலே
: ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

பெ: கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
பெ: மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
பெ.குழு: கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...

# 74 மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
...

# 73 பூட்டுக்கள் போட்டாலும் - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

பாடத்தைத் தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்தக் கோலத்துக்கு ஆரம்பப் புள்ளி வைப்போம்
பறவை போலப் பறந்து பறந்து
படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆட வைத்தால் தாமரைப் பூங்கொடி ஆடிடுமா

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

மாமரச் சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை நான் உங்கள் பக்கத்திலே
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி.. தேனருவி.. ஆடிட வந்ததென் கைதழுவி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

# 72 விழிகளில் கோடி அபிநயம் - கண் சிமிட்டும் நேரம்

படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ம்ம் ம் ம்..
பெ: ம்ம் ம்ம்ம்ம் ம்..
: ஆஆஆ ஆஆ ஆ..
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
...

: இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
பெ: உறவுக்குள் ஒன்றான காலமிது
: உரிமைக்கு நான் தந்த பாலமிது
பெ: கண்ணில் ஒரு மின்னல்.. புது கவிதைகள் படிக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
...

பெ: மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
: ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
பெ: உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
: இன்பம் இனி என்றும்.. புது சுரங்களும் பிறக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
&பெ: விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
...

# 71 பட்டுப் பூவே மெட்டுப் பாடு - செம்பருத்தி

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
...

: கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
பெ: காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
பெ: மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெ: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: பட்டுப் பூவே..
...

பெ: மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
: விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
பெ: மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
: சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
&பெ: பட்டுப் பூவே
...

# 70 சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி
...

# 69 ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

படம்: இனிய உறவு பூத்தது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஹாஹா.. ஹாஹாஹா..
: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
பெ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
ஆ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை.. பூமாலை..
...

பெ: விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையுமிந்த அழகு மோகனம்
நினைவில் இந்தத் தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
: பனிவிழும்
பெ: இரவுகள்
: பலப்பல
பெ: கனவுகள்
: தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
பெ: இனி ஆதி அந்தமெங்கும்
: புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது

: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...

பெ: ஆஹா.. ஆ.. ஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஹா..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆ..
...

: மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் அலைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
பெ: முதல் முதல்
: தொடுவது
பெ: தினம் தினம்
: வளர்வது
பெ: முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
: சுகம் பாதிப் பாதியாகும்
பெ: ஒரு போதை வந்து சேரும் பொழுதிது

பெ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
பெ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...

# 68 அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக் - ரேவதி

படம்: ரேவதி
இசை: சங்கர்-கணேஷ் (?!)
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
...

பெ: கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
சொல்லத்தான் நினைக்கும்.. நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்.. எதையோ மறைக்கும்
: வாடாத பூவுக்கு வாசம் இல்லை
வாடாத பூவுக்கு வாசம் இல்லை
கலந்தேன் இவளை.. மறந்தேன் கவலை

பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
ஹா.. அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
பெ: ம்ஹும்..
: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
நிலவாய் எழுவாய்.. மடிமேல் விழுவாய்
ஒரு வாய் அமுதம்.. தருவாய் மெதுவாய்
பெ: தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
மெதுவாய் திறக்கும்.. அதுவாய் கொடுக்கும்

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
பெ: ihikhik அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது
பெ: கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
: தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

# 67 ஆனந்த ராகம் கேட்கும் காலம் - பன்னீர் புஷ்பங்கள்

படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: உமா ரமணன்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
...

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களைக்
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளியெழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட.. தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலால லாலா.. லாலா லாலா..
...

வண்ண வண்ண எண்ணங்களும்.. வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்னச் சின்ன மின்னல்களும்.. சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலால லாலா.. லாலா லாலா..
...

# 66 சொந்தம் ஒன்றைத் தேடும் - என்னைப் பெத்த ராசா

படம்: என்னைப் பெத்த ராசா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

: வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமிதன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
பாடல்தனில் நீ மயங்கி பைங்கொடியே வேண்டுமென்றாய்
குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசனருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்புதானே இணைத்தது

: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

# 65 கண்ட நாள் முதலாய் - கண்ட நாள் முதல்

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: சுபிக்‌ஷா & பூஜா


கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
ஆ.. கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

# 64 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஒரு மனம்

படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

# 63 பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்

படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
...
கூ.. சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
...

ல்ல்ல்ல் ல்ல்ல்ல் லலல்லா..
லல்லலலல்லல லலல்லா.. லல்லலலல்லல லாலா..
...

தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
...
தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ..

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
...

நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்.. மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்.. மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி.. நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
கரகர வண்டி காமாட்சி வண்டி.. கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
கூ.. திரி திரி திரி திரி.. திரி திரி திரி திரி..
ஆ..
...

ihikhik நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்.. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்லே.. காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே.. வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
...

# 62 ஒரே முறை உன் தரிசனம் - என் ஜீவன் பாடுது

படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஒரே முறை உன் தரிசனம்
...
உலா வரும் நம் ஊர்வலம்
...
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
...

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஹா..
ஓஓஓ ஆஆஆ ஆஆஅ ஆஹா..
...

இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்து தென்றலைச் சேர்ந்த பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்
ஆத்ம ராகம் பாடுவோம்.. அளவில்லாத ஆனந்தம்.. மனதிலே

ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
...

தெய்வம் என்றும் தெய்வம்.. கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம்.. இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லையென்றால் உண்மையில்லையா
உருவம் இல்லையென்றால் உண்மையில்லையா
வானம் பூமியாகலாம்.. மனதுதானே காரணம்.. உலகிலே

ஒரே முறை உன் தரிசனம்
...
உலா வரும் நம் ஊர்வலம்
...
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
...

# 61 தாலாட்டு மாறிப் போனதே - உன்னை நான் சந்தித்தேன்

படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
...

பெண் மானே.. செந்தேனே.. யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம்.. என் ராகம்.. ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே.. இது போதுமே

தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
...

கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு.. என் தோளில் கண் மூடு.. சுகமாய் இரு..

தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ.. ஆரிராரிரோ.. ஆராரோ.. ஆரிராரிரோ.. nangih
...

# 60 ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்

படம்: தெற்கத்திக் கள்ளன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...

பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..
...

# 59 என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஹேய்.. ஹேய்..
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

பொன்மேனி உன் மேனிதான் போராடக் கூடாதய்யா
உன் மேனி திண்டாடினா என் மேனி தாங்காதய்யா
ராஜாதி ராஜாவுக்கு ராஜாத்தி நானில்லையா
சொந்தங்கள் போனாலுமே பந்தங்கள் போகாதய்யா
நேத்து வந்த கோபமும் தாபமும் போனாப் போகுது.. விட்டுத் தள்ளு
சேர்த்து வச்ச பாசமும் நேசமும் வீணாப் போகுது.. அள்ளிக் கொள்ளு
ஆசைப்பட்டதும் அவதிப்பட்டதும் மறந்து போயிடுச்சா
அப்போ ஆளைத் தொட்டதும்.. தோளைத் தொட்டதும் கசந்து போயிடுச்சா
பட்டதும் தொட்டதும் சட்டுன்னு விட்டுடுமா.. ஹே.. ஹே.. ஹேய்..

என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
ஹேய்.. எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

கண்ணா.. என் கைராசிதான்.. கல்லெல்லாம் பொன்னாகுமே
கண்ணாலே கண்டாலுந்தான் முள்ளெல்லாம் பூவாகுமே
பெண்ணுள்ளம் எந்நாளுமே பேசாமே போகாதய்யா
உன்னாட்டம் தள்ளிச் செல்ல என்னாலே ஆகாதய்யா
காதலிச்ச மோகமும் தாகமும் நெஞ்சில் பொங்குற வேளையிலே
கையணைச்ச காலமும் நேரமும் மீண்டும் கூடுற நாளையிலே
முறைச்ச முறைப்பும் விரைச்ச விரைப்பும் இன்னமும் மாறலியா
அப்போ கொதிச்ச கொதிப்பு.. துடிச்ச துடிப்பு இன்னமும் ஆறலியா
கொஞ்சுனா மிஞ்சுறே.. மிஞ்சுனா கெஞ்சுறியே.. ஹே.. ஹே.. ஹேய்..

என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

# 58 நெல்லாடிய நிலமெங்கே - ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: ஜி.வி.பிரகாஷ்
எழுதியவர்கள்: வைரமுத்து & வெட்டூரி சுந்தர மூர்த்தி
பாடியவர்கள்: விஜய் ஏசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீ கிருஷ்ணா
 
பெ: Shringaarinchina manchi bangaaru uyyalalona
Mari bangaaru uyyalalonaa..
...
பெ: பாடுவீரோ.. தேவரே..
பரணி.. கலம்பகம்.. உலா.. ஏதேனும்..
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும்.. ihikhikஅறிவீரோ..
ஆ1: நெல்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே.. கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே
பெ: Chaedaerae chaamindhrudae
Nrupa choodaamaNi chandhrudae
Paga dhaaninti lOchaeraenae
Paga dhaaninti lOchaeraenae..
...

பெ.குழு: தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..
ihikhik
...

ஆ1: கயல் விளையாடும் வயல்வெளி தேடி.. காய்ந்து கழிந்தன கண்கள்
காவேரி மலரின் கடிமணம் தேடி.. கருகி முடிந்தது நாசி
சிலை வழி மேவும் உளி ஒலி தேடி.. திருகி விழுந்தன செவிகள்
ஊன்பொதி சோற்றின் தேன் சுவை கருதி.. ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ
காற்றைக் குடிக்கும் தாவரமாகிக் காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ..

பெ: Cheli naenaethu saahinthunae.. ala vaanenthu varNinthunae
ஆ2: Shringaaram chilikae.. nayagaaram olikae
O priya dhundiya andhiya lOnaya
Hayaloni kinchaga mari puna pinchaga
Ee moham parama sukam
Dhaa soham raacharikam
பெ: SOyagamaa adhi maayagamaa
Praayamanae dhoka paayasamaa
Naa sarasam apsarasam
Naa natanam rasa baritham
ஆ2: Handhinuli cheli noduku
Handhamane sayikedhuku
பெ: Mallela thOmanu gudu pulivae
Vennela thOyadha thadu pulivae
ஆ2: Virahapu valapulu parachithirae
Virishara mulavala visirithirae
BaagO baLa raaNi naavae iLa raaNi
பெ: Saaham sara raajaa bOham thaLa bOjaa
Sumasara mulachara ikavidi pinchara adharamu vadhanamu madhuramu raa
Paruvamu maruvamu jabanamu thapanamu siridhara magasiri varamulu raa
ஆ2&பெ: Vijaritha suralitha thanuratha gamagitha
Rasayutha jathiyutha madhanamu modhaliya
ThanuvaNu vaNuvuna thalagatha thagilina
oripidi valapula kadhanamu thalabada
பெ: Aa..
ஆ2: Vayaari.. Mayoori.. Mayaari
Ee moham parama sukam
Dhaa soham raacharikam
...

தெலுங்கு வரிகளில் பிழை கண்டால், தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்doa

# 57 ஓ வெண்ணிலாவே - ஆனந்தக் கும்மி

படம்: ஆனந்தக் கும்மி
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
பெ: ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
: நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. ஓ.. பால் போல வா
பெ: நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. ஓ.. பால் போல வா
: ஓ வெண்ணிலாவே
பெ: வா ஓடி வா
...

பெ: நிலவின் ஜாடை தெரியும் ஓடை அழகே நீயும் நீராடு.. ஹோய்
: மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து அடடா நீயும் பூச்சூடு
பெ: கதைகள் பேசு கவிகள் பேசு விடியும் வரையில் நீ பாடு
: நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. ஓ.. பால் போல வா

பெ: ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
: ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
பெ: நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. ஓ.. பால் போல வா
...

பெ.குழு: லாலி லாலி லாலி லாலி.. லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி.. லாலி லாலி லாலி
லாலி லல்லாலி லாலி லல்லாலி.. லாலி லாலி லாலி
லலலலி லலலி லலலலி லா லலலலி லலலி லலலலி லா
லாலி லலில லாலி லலில ஹோய்
...

: இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு இதுதான் முடிவு வேறேது.. ஹோய்
பெ: இறக்கும்போதும் இதுவே போதும் இனிமேல் பிறவி வாராது
: காதல் மாலை சூடும் வேளை அழுகை ஏனோ கூடாது

பெ: நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. பால் போல வா
&பெ: ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எம்மை நீ காண வா.. ஓ.. பால் போல வா

&பெ: ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பெளர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆவியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே
...

# 56 ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி

படம்: ஆனந்தக் கும்மி
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & எஸ்.பி.ஷைலஜா

பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...

பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1&பெ2: குகுகுக்குகு குக்குக்குகுக்கூ..
...

பெ2: நிலவெரியும் இரவுகளில்.. ஓ மைனா.. ஓ மைனா..
மணல் வெளியில் சடுகுடுதான்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
பெ2: ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது.. ஓ மைனா.. ஓ மைனா..

பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
...

பெ1: இலைகளிலும் கிளைகளிலும்.. ஓ மைனா.. ஓ மைனா..
இரு குயில்கள் பெயரெழுதும்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
பெ1: மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது.. ஓ மைனா.. ஓ மைனா..

பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...

# 55 சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் - மீண்டும் கோகிலா

படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் &  எஸ்.பி.ஷைலஜா

பெ: ம்.. ம்ஹும் ஹும்ஹும்..
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...

பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
: சபாஷ்..
...
: பலே..
...

: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..

பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...

# 54 மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே

படம்: செண்பகமே செண்பகமே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
தண்ணி தொட்ட பாகமெல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலமெப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

குத்தாலச் சாரலுக்கு யோகமடி
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி
தொட்டுத் தொட்டுச் சேர்ந்த பின்பு தீருமடி
உன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒண்ணாச் சேர வந்தாப் போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன்னுதடில் வந்ததென்ன
தேனெடுத்து நானறிந்த நேரமென்ன
உன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாகத் தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
தண்ணி தொட்ட பாகமெல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலமெப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ளே
...

# 53 வாசலிலே பூசணிப்பூ - செண்பகமே செண்பகமே

படம்: செண்பகமே செண்பகமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
...

பெ: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
: ஆ.. ஆஆஆ.. கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது
பெ: நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
: நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெ: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்

: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெ: நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
...

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆ..
...

: மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெ: ஆ.. ஆஆஆ.. கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது
: ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெ: ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே
: ihikhikபோதும்.. போதும்.. கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே

பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
...

# 52 நீயெங்கே என்னன்பே - சின்னத் தம்பி

படம்: சின்னத் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

 நீயெங்கே..
...
என்னன்பே..
...
மீண்டும் மீண்டும் மீண்டும்
...
நீதானிங்கு வேண்டும்
...
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினைத் தொடர்ந்திட மனமிது துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும்போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியுமிங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆஆ..
...

வீதியென்றும் வெட்டவெளிப் பொட்டலென்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றலிங்கு பார்க்குமா பார்க்குமா
எத்தனென்றும் ஏழை பணக்காரனென்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தனென்றும் பிச்சை போடும் பக்தனென்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றுமுண்டு
கதைகளிங்கு முடியாது மீண்டும் தொடரட்டுமிங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...