# 115 எங்கெங்கு நீ சென்ற போதும் - நினைக்கத் தெரிந்த மனமே

படம்: நினைக்கத் தெரிந்த மனமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது காயங்களும் ஆறியதேன்
பெ: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன்னுறவே
நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும் மயங்குவதேனோ என் மனதே
: இரு நெஞ்சின் துன்பம்.. இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

பெ: மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்.. மாங்குயிலே.. மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்.. கண்மணியே.. கண்மணியே
: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்.. சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்.. கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெ: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
&பெ: லாலால லாலால லாலா.. லாலால லாலால லாலா..
...

# 114 ரோஜா ஒன்று முத்தம் - கொம்பேறி மூக்கன்

படம்: கொம்பேறி மூக்கன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...

: தங்க மேனி தழுவும் பட்டுச் சேலை நழுவும்
பெ: தென்றல் வந்து விலக்கும்.. அது உங்களோடு பழக்கம்
: சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன்.. மூடாதே
பெ: மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு.. வாடாதே
: அல்லிப்பூவின் மகளே.. கன்னித் தேனைத் தா.. ஹோய்..

பெ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...

பெ: வெண்ணிலாவில் விருந்து.. அங்கு போவோம் பறந்து
: விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
பெ: தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
: நம்மைப் பார்த்து காமன் தேசம் mltan100.blogspot.comஜன்னல் சாத்தி வாய் மூட
பெ: கன்னிக் கோயில் திறந்து பூஜை செய்ய வா.. ஹோய்..

: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
: ம்ஹும்.. வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...

# 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு
: லலலா
பெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..
: படிக்கிற வயசில்லையே
பெ: லலலா..
ஆ: படுக்கையை விரித்துவிடு
பெ: என் பாடம் நான் சொல்ல
: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: உதட்டினில் இனிக்கிறதே
பெ: லலலா..
: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..
பெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு
: ஆஆஆ..
பெ: அது என்ன இலவசமா
: ஆஹாஹா.. ஆரம்பம்
பெ: பூவுக்குள் பூகம்பம்
: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

# 112 வா.. காத்திருக்க நேரமில்லை - காத்திருக்க நேரமில்லை

படம்: காத்திருக்க நேரமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...

: ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே.. ஹா..
காந்தம் உருவாகுமடி கூடும் இளஞ்சோடியிலே
பெ: வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு.. சலிக்காது பூ மாது
: ஆசை ஊற்று போலே வெள்ளமாகப் பாயும் நேரமே
ஆடை ஈரமாக நீயும் நானும் நீந்த வேண்டுமே

பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓ..
...

பெ: மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத் தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்
: இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது
பெ: அன்பே.. நீல வண்ணம் வானையென்றும் நீங்கிடாது
மீட்டும் விரலில்லாது வாழ்வதேது வீணையானது

: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
பெ: விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
பெ: நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...

# 111 பொன் மானே கோபம் - ஒரு கைதியின் டைரி

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன்

: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...

: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்.. வா
பெ: ஊடல் என்பது காதலின் கௌரவம்.. போ
: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
பெ: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெ: நாணம் வந்தால் ஊடல் போகும்.. ஓஹோ..

: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...

பெ: எந்தன் கண்களில் உன்னையே பார்க்கிறேன்.. வா
: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன்.. வா
பெ: உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
: கண்ணே.. மேலும் காதல் பேசு
பெ: நேரம் பார்த்து நீயும் பேசு
: பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ..

: பொன் மானே
பெ: ம்ஹும்..
: கோபம்
பெ: ம்ஹும்..
: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
&பெ: லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
...

# 110 எது சுகம் சுகம் - வண்டிச்சோலை சின்ராசு

படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்


 

 பெ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
பெ: சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

பெ: கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு
: பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்..
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர

பெ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

# 109 இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி

படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


: இதழில் கதை எழுதும் நேரமிது
...
: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது.. தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
...

: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெ: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
: இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏனின்னும் தாமதம்.. மன்மத காவியம் என்னுடன் எழுது
பெ: நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
: ஏங்கித் தவிக்கையில் நாணம் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை.. மணமாலையிடும் வேளைதனில்
தேகமிது விருந்துகள் படைத்திடும்

: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
...

: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெ: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் - அந்த
மேகம்தனில் ஏது.. நீ சொல்வாய் கண்ணா
: அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பானால் - அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
...

# 108 பூ பூ பூ பூப்பூத்த சோலை - புது நெல்லு புது நாத்து

படம்: புது நெல்லு புது நாத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...

பெ: காற்றினில் கான மழை.. கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை.. பல விதத்தில் பாடுது பாவை நிலை
: மூச்சினில் ஓடிய நாதமென.. முழுவதும் கீதமென
பெ: முடி முதல் அடி வரை மோகமென.. தொடர்கிற தாகமென
: பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட.. பாடலைப் பாடி வர.. பல சுகம் பெற

பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
பெ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
: பூ பூ பூ.. பூஜை தினம்
பெ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...

: நேற்றொரு கோலமடி.. நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி.. இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி.. இனிமைகள் இணைந்தபடி
: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி.. உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்தபடி வரங்கொடுத்தது

: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...

# 107 குங்குமம் மஞ்சளுக்கு - எங்க முதலாளி

படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

 பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
...

: பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன
பெ: ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்
: மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
பெ: நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
: ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பெ: பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
: எந்நாளும் இன்பம் ஒரு கோடி

பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...

பெ: மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்
: நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
பெ: கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
ஆ: வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பெ: பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
: பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
பெ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி

: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...