#119 மறக்கத் தெரியவில்லை எனது காதலை - உதவும் கரங்கள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: உதவும் கரங்கள்

இசை: ஆதித்யன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ம்ஹும்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ஹும்ஹும் ஹுஹும்..
ஆஹாஹா ஹாஹா.. ஆஹாஹாஹா..
...

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே.. nangih

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...

காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்
சொந்தமாகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகராணியே..

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...

உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
கடல் நீலம் கூட கரைந்தோடிப் போகும்
என் அன்பில் நிறமாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம்.. என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி..

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
...

#118 சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா

என் இசைக் கடவுளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!doasembahros

படம்: ஆட்டோ ராஜா

இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி


: சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. தாரா ரரரர ரரரர ரா..
...

பெ: தானானா.. நா..
ஆஆஆஆஆ.. நானானா.. ஆ.. நா.. ஆஆஆ ஆஆஆஆ..
...

: கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
: கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொய் கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்.. காலத்தால் மூவாத

: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...

: அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
பெ: ஆஹ்ஹா..
: சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெ: சிந்தி.. தேன் பாய்கின்ற உறவை.. hah ihikhik
அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம்தான்..
: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கொஞ்சத்தான்..
: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கண்ணுக்குள் என்னென்ன நளினம்.. காலத்தால் மூவாத

பெ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
: தாரா ரரரர ரிரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...

: ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
: நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: மெய் தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: காமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன நயம்

: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா
&பெ: ரரரர
பெ: ரரரர
&பெ: ரரரர
பெ: ராரா
&பெ: ரரரர
பெ: ரரரர
&பெ: ரா..
...