#128 சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
: ஆஆஆ.. வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
: வானிலவை நீ கேளு.. கூறுமென் வேதனை
பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ
: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
: ஆஆஆ ஆ.. மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
: காயங்களும் ஆறாதோ.. நீயெதிர் தோன்றினால்
பெ: உடனே வந்தால் உயிர் வாழும்
: வருவேன்.. அந்நாள் வரக் கூடும்

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

#127 மழை வருது.. மழை வருது - ராஜா கைய வெச்சா

படம்: ராஜா கைய வெச்சா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: லாலால லாலால லாலா. லாலால லாலாலலா..
லாலா லாலாலலா.. லலல லாலா லாலாலலா..
...
: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே
...

பெ: இரவுமில்லை
: பகலுமில்லை
பெ: இணைந்த கையில்
: பிரிவுமில்லை
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
: நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும்.. கண்ணா.. வா..

: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...

: கடந்த காலம்
பெ: மறந்து போவோம்
: கரங்கள் சேர்த்து
பெ: நடந்து போவோம்
: உலகமெங்கும் நமது ஆட்சி
பெ: நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
: உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்.. இனிய ராகம் கேட்கும்.. வா..

பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே.. ஹொய்
: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...

#126 நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா

பெ: லால லாலலா.. லால லால லாலா.. லாலலா.. லாலலா லா..
...
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது.. தேவியிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
...

: பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பார்த்துப் பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பெ: பார்வை செய்த சோதனை.. நாளும் இன்ப வேதனை
: காதல் கொண்ட காமனைக் கண்டுகொண்டு நீயணை
பெ: கூடினேன்.. பண் பாடினேன்.. என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன்.. தள்ளாடினேன்.. உன் தாகம் தீர்க்கலானேன்
: பாலும் தெளிதேனும் பரிமாற நேரம் வந்ததே

பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது.. தேவனிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...

பெ: ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்றபோது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன
: நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
பெ: தோளில் இன்ப நாளிலே ஆடுகின்ற பூவிது
: அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெ: போதும்.. இது போதும்.. இளம் பூவை மேனி தாங்குமா

: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
பெ: இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
: தேவலோகம் வேறு ஏது
பெ: தேவனிங்கு உள்ளபோது
: வேதம் ஓது..
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. ஆ..
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...

#125 நீலக்குயிலே உன்னோடு நான் - மகுடி

படம்: மகுடி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
பெ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
பெ: கபதப கபகரி ஸரிகப தா..
: கபதப கபகரி ஸரிகப தா..
பெ: கபதபகப..
: கபதபகப..
பெ: கபதபகப.. ஸா..
: கபதபகப.. ஸா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
...

பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...

பெ: அதிகாலை நான் பாடும் பூபாளமே.. ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே.. நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
பெ: ஆகாயம்.. பூமி.. ஆனந்தக் காட்சி
: சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெ: திசைகளில் எழும் புது இசையமுதே.. வா.. வா..

: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
பெ: உள்ளம் பாமாலை பாடுதே
: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...

பெ: நீர் கொண்டு போகின்ற கார் மேகமே.. தூறல்கள் நீ போட தாகம் தீரும்
: நதி பாயும் அலையோசை ஸ்ருதியாகவே.. நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெ: மலர்க் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
: பனிவாடைக் காற்று பல்லாண்டு பாடும்
பெ: செவிகளில் எழும் ஸ்வர லய சுகமே.. வா.. வா..

பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
: உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: ஆஆஆ ஆ..
...

#124 மகராஜனோடு ராணி வந்து சேரும் - சதி லீலாவதி

படம்: சதி லீலாவதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் & சித்ரா

: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...

பெ: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான்.. அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான்.. அவன் தந்தான்
: கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்.. ஓர் காதல் பூத்ததோ
பெ: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெ: ஒரு ராகம்.. ஒரு தாளம்.. இணைகூடும்போது கானம்தான்

பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்
: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...

: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை.. பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை.. பேராசை
பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்.. நீ கேட்க வேண்டுமோ
: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெ: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
: என்ன வேகம்.. என்ன தாகம்.. ஒரு காவல் தாண்டக் கூடுமோ

: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
...

#123 வானம் நிறம் மாறும் - தாவணிக் கனவுகள்

படம்: தாவணிக் கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆ ஆ.. ஆஆஆ ஆஆ..
: ஆ ஆ.. ஆஆ ஆ..
பெ: ஆ ஆ ஆ..
: ஆ ஆ ஆ..
&பெ: ஆஆஆஆ ஆ..
...
: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

பெ: மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
: அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெ: மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
: இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

பெ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

பெ: லா லாலலல லா லாலலல லாலலாலலா..
: லா லாலலல லா லாலலல லாலலா..
பெ: லாலலா லா.. லாலலா லா..
: லாலலா லா லா..
...

: பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெ: கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும்.. அன்புக் கட்டளை
: சங்கதி ஏராளம்.. என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெ: இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

#122 மூங்கில் காட்டோரம் - பூக்கள் விடும் தூது

படம்: பூக்கள் விடும் தூது
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே.. என் காதோடு நீ பாட வா
மலரே.. உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

அலைகளின் நாட்டியம் கரை மீதுதான்
ஆஹாஹா.. இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட.. இயற்கையும் பாட
இறைவா உன் கற்பனை.. வியக்கும் என் சிந்தனை
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

மேகமென்னும் பெண்ணொருத்தி மோகங்கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி.. கல்யாணம் நடந்ததடி கூடி
மழையோ பெற்ற பிள்ளை.. அதிலே பல கவிதை
ஹே.. மலைகளின் மேலே அருவி விழ..
ஆஹாஹா.. மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க.. நதியதை ரசிக்க
சலங்கை போல் நெல்மணி குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
லாலா லாலாலா.. லா லா லா லாலலா..
லாலா லாலா லாலாலாலா..
...

#121 ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்

படம்: சம்சாரம் அது மின்சாரம்
இசை: சங்கர்-கணேஷ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...

சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
...

ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...