#143 மாலை எனை வாட்டுது - பூக்களைப் பறிக்காதீர்கள்

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
பெ: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
பெ: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
பெ: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
...

: விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
துயில் தன்னை இழந்து புலம்புகிறேன்
இளமையில் தூங்காதா.. இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா.. எந்தன் மோகமும் தீராதா

பெ: மாலை எனை வாட்டுது
: மண நாளை மனம் தேடுது
...

பெ: உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா.. மடியை தலையணையாக்கிடவா
இரு கரம் சேர்த்திட வா.. இல்லை.. எனையே ஈர்த்திடவா

: மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
பெ: மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
பெ: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
: மாலை நமை வாட்டுது
பெ: மண நாளை இமை தேடுது
...

#142 வசந்தமே.. அருகில் வா - அமரன்

படம்: அமரன்
இசை: ஆதித்யன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வசந்தமே.. அருகில் வா.. நெஞ்சமே.. உருக வா..
...
வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா
...

கனவை சுமந்த கயல்விழி.. உறவில் கலந்த உயிர் மொழி
இதயம் முழுதும் புது ஒளி.. இரவல் தந்த அவள் மொழி
சொந்தமுமாகி.. பந்தமுமாகி.. என் உயிர் வாழும் சொர்க்கமுமாகி
இமைக்க மறந்து இணைந்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா
...

மழலை சுமந்த மரகதம்.. மனதை சுமந்த தளிர் மரம்
நிழலைக் கொடுத்த வளைக்கரம்.. உயிரும் அவளின் அடைக்கலம்
புண்ணியம் கோடி செய்தவன் நானோ.. ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா.. நெஞ்சமே.. உருக வா..
...

#141 சீர் கொண்டு வா - நான் பாடும் பாடல்

படம்: நான் பாடும் பாடல்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆ ஆ ஆ..
: சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ: சீர் கொண்டு வா வெண் மேகமே
: இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

: ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே.. ஆலாபனை..
பெ: ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆலாபனை.. ஆராதனை.. கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
: ஓஓ ஓஓ.. காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
பெ: ஆஆ ஆஆ.. சீர் கொண்டு வா.. வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

பெ: தீண்டாத போது என் தேகம் வாட.. நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ..
: ஓஓஓஓஓ ஓ ஓஓஓஓஓ..
என்னென்பதோ.. ஏனேன்பதோ.. ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
பெ: ஓஒ ஓஓ.. அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

: ஓஓ ஓஓ சீர் கொண்டு வா.. வா.. வெண் மேகமே
பெ: இது இனிய வசந்த காலம்
: இலைகளில் இளமை துளிரும் கோலம்
&பெ: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

#140 உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்- அபூர்வ சகோதரர்கள்

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னை நினைச்சே.. பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே.. நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
...
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம்போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
...

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே.. ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே.. ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு.. நன்றி உரைப்பேன் உனக்கு.. நான்தான்

உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
...

கண்ணிரண்டில் நான்தான் காதலென்னும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன்.. அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம்.. உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம் தங்கமே.. ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே.. ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு.. நன்றி உரைப்பேன் உனக்கு.. நான்தான்

உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம்போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்.. தங்கமே.. ஞானத் தங்கமே
...

#139 நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

பெ: வானப் பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்
பெ: மஞ்சள் மணக்கும்.. என் நெத்தி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
: மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னேலே
பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்.. இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
: ஸ்வர்க்கம் எதற்கு.. என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு.. கண்ணே வா
பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான்.. அன்பே வா..
: சுமையானது ஒரு சுகமானது.. சுவை நீதான்

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

#138 பூந்தென்றல் காற்றே வா வா - மஞ்சள் நிலா

படம்: மஞ்சள் நிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா

பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
: பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே..

: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

: காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம் கவிதை பாடும்
கை சேரும்போதும் இதயம் கூடும்
பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ..

பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

#137 தேவன் கோவில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்

படம்: நான் பாடும் பாடல்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
...

பாவை நின்றேன் சோலை ஓரம்.. நீயும் வந்தாய் மாலை நேரம்
பார்வை நான்கும் பேசும் ஜாலம்.. பார்த்தால் போதும்.. வெள்ளம் மோதும்
காதல் தேவனே.. நீயென் ஜீவனே
ஊஞ்சல் போலே எண்ணம் கோடி.. நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
கண்ணா... நீயும் கேளாயோ
அன்பே நீயும் எங்கே வந்தாய்.. யாரைக் கண்டு இங்கே நின்றாய்
உள்ளம் என்னும் மேடை உண்டு.. ஆட வா
கண்ணில் கோடி ராகம் கொண்டு பாட வா

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
...

வானும் காற்றும் உந்தன் பேரை வாழ்வில் சொல்லும் மண்ணில் நாளை
உன்னை எண்ணி ஏங்கும் பூவை.. உந்தன் அன்பே என்றும் தேவை
நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
காலம் கோடி ஆகும்போதும் காதல் கீதம் என்றும் வாழும்
கண்ணா... நீயும் கேளாயோ

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
...

#136 சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது - ஒரு தாயின் சபதம்

படம்: ஒரு தாயின் சபதம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
&பெ: ஹோ..
: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
...

: மூடி வச்ச மொட்டுப் பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா
பெ: வண்டின் இதழ் மொட்டில் பட்டு விட்டால்
மொட்டின் இதழ் விட்டுக் கொடுக்குமே
: ஓ.. பூனைக்கு மணியைக் கட்டுறது யாரு
பெ: இப்படியே இருந்தா முடிவென்ன கூறு
: பெண்ணின் மன ஆழம்..
அறிந்துடும் முன்னே இறங்கிட எனக்கும் தயக்கம்
பெ: காந்தமதைக் கண்டா..
இரும்பது தானே இணைந்திட வருவது வழக்கம்.. ஹா.. ஹா..

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது
பெ: இந்த மனசு தவிக்குது
...

: தினம் தினம் உன்னைப் பார்க்கையில
மனம் விட்டுப் பேசத் துடிக்கிறேன்
பெ: ஊரு கதை தானே நடக்குது.. உள்ள கதை உள்ளே முழிக்குது
: பார்க்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பெ: பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்
: சிப்பிக்குள்ள முத்தைப் போல..
நெஞ்சுக்குள்ள காதலை மூடி மூடி வைப்பதும் ஏனோ
பெ: தொண்டைக்குழி வரைக்கும்..
அலையுது வார்த்தையும்.. வந்து வந்து திரும்புது ஏனோ.. ஹோ.. ஹோ..

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
&பெ: ஹோ..
: சொல்லாமத்தானே..
&பெ: இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
...

#135 கண்ணா உனைத் தேடுகிறேன் - உனக்காகவே வாழ்கிறேன்

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
 
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...
பெ: கண்ணா உனைத் தேடுகிறேன்.. வா.. கண்ணீர்க் குயில் பாடுகிறேன்.. வா..
உன்னோடுதான் வாழ்க்கை.. உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை.. கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன்.. வா.. கண்ணீர்க் குயில் பாடுகிறேன்.. வா..
...

பெ: ஏனிந்த காதலென்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது.. இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன்.. உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

பெ: கண்ணா உனைத் தேடுகிறேன்.. வா.. கண்ணீர்க் குயில் பாடுகிறேன்.. வா..
...
: கண்ணே உனைத் தேடுகிறேன்.. வா.. காதல் குயில் பாடுகிறேன்.. வா..
உன்னோடுதான் வாழ்க்கை.. உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை.. கண்ணே இனி சோகமில்லை
கண்ணே உனைத் தேடுகிறேன்.. வா.. காதல் குயில் பாடுகிறேன்.. வா..
...

: சோகத்தின் பாஷையென்ன.. சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும்.. கண்ணீர் அது காயுமா
பெ: சோதனை நேரலாம்.. பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும்.. வானம் என்ன போகுமா
: ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே

: கண்ணே உனைத் தேடுகிறேன்.. வா.. காதல் குயில் பாடுகிறேன்.. வா..
பெ: உன்னோடுதான் வாழ்க்கை.. உள்ளே ஒரு வேட்கை
: காதல் என்றும் தீர்வதில்லை.. கண்ணே இனி சோகமில்லை
பெ: கண்ணா உனைத் தேடுகிறேன்.. வா.. காதல் குயில் பாடுகிறேன்.. வா..
...

#134 கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டை வால் குருவி

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

#133 ராஜ ராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

கண்ணோடு கண்களேற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும்போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசைத் தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம்.. என் காதல் வாகனம்
செந்தாமரை.. செந்தேன் மழை.. என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

கள்ளூரப் பார்க்கும் பார்வை உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளுமுள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே.. நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே.. பொன் மேனி.. கேளாய் ராணி..

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

#132 வெளக்கு வச்ச நேரத்திலே - முந்தானை முடிச்சு

படம்: முந்தானை முடிச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

பெ: வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க.. அவன் குடிக்க.. அந்த நேரம் தேகம் சூடு ஏற..
: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
பெ:
: மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெ:
...

: உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பெ: பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும்
: ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
பெ: நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
: பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

பெ: வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
...

: நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
பெ: நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு
: நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
பெ: ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது
: பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெ: நான் கொடுக்க.. அவன் குடிக்க.. அந்த நேரம் தேகம் சூடு ஏற
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
...

#131 பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோயில் கிழக்காலே

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி

: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...

: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
பெ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
கண்ணாடி வளை முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
: சின்ன வயசுப் புள்ள.. கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததே
பெ: கல்யாணம்.. கச்சேரி.. எப்போது

பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...

: வாடைய வீசும் காத்து வளைக்குதே எனைப் பார்த்து
பெ: வாங்களேன் நேரம் பார்த்து.. வந்து என்னைக் காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ.. அப்போதும் சூடாச்சு
எப்போதும் எனை கொத்தாக அணை.. என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க.. கொஞ்சம் அணைச்சுக் கொள்ளய்யா
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது

பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...

#130 எனக்கென பிறந்தவ - கிழக்குக் கரை

படம்: கிழக்குக் கரை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
: I love you..
எனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
தளுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
ஊரையெல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவந்தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ..
பெ: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
...

: மாஞ்சிட்டு மேடை போட்டு மைக் செட்டு மாட்டினா
மாமாவ வளைச்சிப் போட புதுத் திட்டம் தீட்டினா.. ஹா..
பெ: ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்னாடம் தூக்கம் கெட்டு அனல் மூச்சு வாங்கினா
: பச்சக் கிளியே.. தன்னந்தனியே.. இன்னும் என்னாச்சு
பெ: உச்சந்தலையில் வச்ச மலரில் வெப்பம் உண்டாச்சு
: மயங்காதே.. மாலை மாத்த மாமன் வந்தாச்சு

பெ: உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
...

பெ: நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தலாடுது
நீ வைக்கும் பொட்டுக்காக நடு நெத்தி வாடுது
: ஆத்தாடி ஒன்னத்தானே உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்.. கடல் வந்து கூடுது
பெ: அந்திப் பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட
: மையை எழுதி.. மஞ்சக் குருவி கையை கோர்த்தாட
பெ: அடங்காத ஆசை கொண்டு நானும் போராட

பெ: உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
: ஆ.. ஆஹஹஹா..
பெ: எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
: ஆ.. ஆஹஹஹா..
பெ: ஊரையெல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவந்தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ..
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
எனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
தளுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
...

#129 புத்தம் புது பூப்பூத்ததோ - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: ஆ.. ஆஆஆஆ ஆ ஆஆ ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ..
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

: பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் பழி விழுமோ என்றஞ்சும்
பெ: ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம்.. நினைவுகளில் உன் எண்ணம்
: கருணை கொண்டு நீதான் காயம்தன்னை ஆற்ற
பெ: பார்வை கொண்டு நீதான் பாச தீபம் ஏற்ற
: உயிரென நான் கலந்தேன்

பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

பெ: வாழ்வெனும் கோலங்கள் இன்று வரைந்தது உன் பொன்னுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
: கீழ்த்திசை பூபாளமென்று எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
பெ: கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
: தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
பெ: உனக்கென நான் பிறந்தேன்

: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
: வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
பெ: கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ