#210 பனியில் நனையும் மலர்கள் ரெண்டு - ப்ரியா ஓ ப்ரியா

படம்: ப்ரியா ஓ ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
...
பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்.. ஆஹா.. ஆஹஹஹா..
லலலா.. லலலா.. லா லா..
...
: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
பெ: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
: புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

: கண்ணோடு நீந்திடும் கலைவண்ணமே
கண்மூடும் பொழுதிலும் உன் எண்ணமே
பெ: இளவேனிற்காலமும் பிறந்தது மெல்ல
பூந்தென்றல் காதோடு உன் பெயர் சொல்ல
: விதை மீது ஒரு நாள் வான் மழைத்துளி
விழும்போது மலரும் சிறு பூச்செடி
பெ: ஒரு நாள் திருநாள் நாளை வரலாம்
கேட்கும் எல்லாம் கண்ணன் பெறலாம்

: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

பெ: நீயின்றி வாழ முடியாதய்யா
நான் தேடும் பொழுதிங்கு விடியாதய்யா
: நீ வேறு நான் வேறு இனியில்லையே
நான் தூங்க வேறொரு மடியில்லையே
பெ: நாள்தோறும் வந்திங்கு இளைப்பாறு
நீராட நானொரு தேனாறு
: தென்றல் நாளும் தீண்டும் பூவே
தரை மேல் இறங்கி நடக்கும் நிலவே

பெ: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
...

#209 தூரத்தில் நான் கண்ட உன் முகம் - நிழல்கள்

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


பெ: ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆ..
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே.. ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...

பெ.குழு: ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ.. ஆ..
...
பெ.குழு: ஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
...
பெ: வேய்ங்குழல் நாதமும் கீதமும்..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆ.. ஆ..
வேய்ங்குழல் நாதமும் கீதமும்.. மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
பாடும் பாட்டிலே புது ராகம் தோன்றுமா

பெ: தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...

பெ: காதல் எனும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா
பெ.குழு: மீரா.. மீரா.. மீரா.. மீரா..
பெ: வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
பெ.குழு: தானனானனானனான..
பெ: கவலை யாவும் மாற வேண்டும்
பெ.குழு: தானனானனானனான..
பெ: கனவு போல வாழ்விலெந்தன் கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன்.. மறவேன்.. மறவேன்.. உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்.. வரும் விதி தரும் அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே..
வானமும் மேகமும் போலவே நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பெ: தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...