#233 அழகிய நதியென - பாட்டுக்கு ஒரு தலைவன்

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...
பெ: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
தேகந்தான் மோகத்தில் வாட.. நாளுந்தான் மோனத்தில் கூட
: துள்ளும் அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...

: தேடிய தேவதையே.. திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே.. உனை நினைத்துப் பாடிடும் இன்னிசையே
பெ: நாயகன் பூமடிமேல் நானும் பல நாடகமாட வந்தேன்
மாயவன் குழலிசையில் எனது மனம் மயங்கிய நிலையிருந்தேன்
: தேரினில் ஏற வந்தேன்.. திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க.. ஓடையில் நீந்த வந்தேன்
பெ: கேட்டது யாவையும் நான் தருவேன்.. இனி கேள்வி என்ன.. எனை அணைத்திட

: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
பெ: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
...

பெ.குழு: ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா.. ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா..
பாபா.. பாபா.. பாபாபா.. பாபா.. பாபா.. பாபாபா..
...

பெ: கோடியில் நீ ஒருவன்.. பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்.. எனது மனக் கோவிலில் நீ இறைவன்
: ஆடிடும் பெண்ணழகே.. ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூமலர் மேல் தோளணைத்துத் தூங்கிடும் தேன் துளியே
பெ: வானகம் வையகமும் வாழ்த்த வரும் நாளினைக் கேட்டு வந்தேன்
நானுன்னை சேர வரும் நாளில் ஒரு நாட்டியமாட வந்தேன்
: மெல்லிய பொன் இடை மேடையிலே அரங்கேற வரும்.. தமிழ் மகனடி

பெ: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ: தேகந்தான் மோகத்தில் வாட
: நாளுந்தான் மோனத்தில் கூட
பெ: துள்ளும் அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...

#232 வா வா என் வீணையே - சட்டம்

படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்



: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா..
: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமா
: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா.. நநந்நநநா..
...

பெ: தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
: துணை தேடுதோ.. தனிமைத் துயர் கூடுதோ
பெ: அணை மீறுதோ.. உணர்ச்சி அலை பாயுதோ
: நாள்தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட

பெ: வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா..
பெ: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
...

: சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
பெ: இரவாகலாம்.. இளமை அரங்கேறலாம்
: உறவாடலாம்.. இனிய சுரம் பாடலாம்
பெ: கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும்

: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா..
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
: கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
பெ: இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா.. வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா.. நநந்நநநா..
...

#231 அழகாகச் சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி

: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
: மலையோரத்தில்
பெ: லலலலலா..
: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
: மலையோரத்தில்
பெ: லலலலலா..
: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...

: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
: பனி தூங்கும் ரோஜாவே
பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...

பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே
: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா
பெ: இள மாலைப் பொழுதாக
: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட

: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
: மலையோரத்தில்
பெ: லலலலலா..
: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...

#230 ஓலை குருத்தோலை காத்துல ஆடுது - அறுவடை நாள்

படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

பெ.குழு: லல லல்ல லாலாலா.. லாலாலா லாலாலா..
லல லல்ல லாலலா லா..
...
பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
கதை கதையாம் காரணமாம்.. கல்யாணத் தோரணமாம்
காத்தாடுது.. ஆஹா.. நல்ல நல்ல நல்ல நல்ல..
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

பெ: சந்தனத்தைப் பூசாம.. சம்மந்தத்தைப் பேசாம
சேர்ந்தது என்ன.. காத்தும் பூவும் கூசாம
பெ.குழு: சந்தனத்தைப் பூசாம.. சம்மந்தத்தைப் பேசாம
பெ: சேர்ந்தது என்ன.. காத்தும் பூவும் கூசாம
இதுவும் பொதுவா இலக்கியந்தானே.. இயற்கை எழுதும் இலக்கணமோ
மேகம் ஒரு ஈரச் சேலை.. வானத்துல காயப் போட
தூவும் மழைச் சாரல் போல தினமும் அதிசயம் நடக்குது

பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

பெ.குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
...

பெ: மல்லிகையும் பூத்தாச்சு.. அல்லியுந்தான் பூத்தாச்சு
கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பார்த்தாச்சு
பெ.குழு: மல்லிகையும் பூத்தாச்சு.. அல்லியுந்தான் பூத்தாச்சு
பெ: கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பார்த்தாச்சு
உலகம் முழுதும் பருவத்தின் கோலம்.. மனது முழுதும் கனவு மயம்
பொண்ணு இவ சின்னப் பொண்ணு.. பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு
பூவரசம் பூவப் போல சிரிச்சா.. புதுப்புது விதத்துல

பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
பெ.குழு: கதை கதையாம் காரணமாம்.. கல்யாணத் தோரணமாம்
காத்தாடுது.. ஆஹா..
பெ: நல்ல நல்ல நல்ல நல்ல..
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

#229 தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள்

படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
 

: ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்.. ப்ரேம வஸ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதப் ப்ரேமம்.. ப்ரீதி வஸ்யப் ப்ரீதம்
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்.. தந்துனா மமச்சீவனம்
மமச்சீவனம் மமச்சீவனம் மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமச்சீவிதம்.. மமச்சீவனம் மமச்சீவனம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி..
பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...

பெ: நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்களெல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...

: ஏ.. ஏஏஏ.. தந்தன தந்தன தந்தனா.. ஆஆஆ..
தந்தானத் தந்தானத் தானன்னா.. நநா.. தந்தானா.. தந்தானா.. ஹே..
...
பெ: ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று.. தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர்க் காதலி

பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...