#252 யமுனா நதிக்கு வந்து - கண்ணே கலைமானே

படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெ: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ.குழு: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ: காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ: வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ.குழு: முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ: குறும்பு செய்வாண்டி சிங்காரக் கண்ணன்
வழியை மறைத்துக் கொண்டு வம்புகள் பண்ணிக் கொண்டு
ஜாடை வார்த்தைகள் சொல்லி அணைப்பான் ஆசை கொண்டு
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
...

பெ: சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ.குழு: இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ: ராதைக்கு இவனின்று சுகமிங்கு ஏது
மனதைத் திருடிக் கொண்ட மாயக் கள்ளனடி
மையல் பார்வைகளாலே மயக்கும் கண்ணனடி
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..

பெ: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ&பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

#251 நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன்னாடை.. ஹே.. மிதக்கின்ற பாலாடை
உன் காலை.. ஹே.. குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
...

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில்.. ஹே.. இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள்.. ஹே.. உனைக் கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவறிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
ம்ம்ம் ஹும்ஹும்ஹும் ம்ம்..
ஆஆஆ ஹாஹாஹா.. ஆஆ..
...

#250 பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
...

சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
ஹேஹே.. இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்.. இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...

காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால் ihikhik பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
ஏஹே.. வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. பனி விழும் மலர்வனம்
பனி விழும் மலர்வனம்
...

#249 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ: ஆஆ.. ஆஆ.. ஆஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்.. ஹாஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
...

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆ ஆஆ..
: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெ: மௌனமே சம்மதம் என்று
: ம்..
பெ: தீண்டுதே மன்மத வண்டு
: ம்..
பெ: மௌனமே சம்மதம் என்று.. தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பெ: பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
...

பெ: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ: ஹா..
: கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஹா..
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்.. கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்.. ஹா.. ஹா..

பெ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெ: உன் வார்த்தை சங்கீதங்கள்.. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
&பெ: பொன் மேகம் நம் பந்தல்
...

#248 கொட்டுக்களி கொட்டு நாயனம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
...

பெ: சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது
: கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது
பெ: கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது
: கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது
பெ: ராஜராஜனும் கைகோர்த்த ராணியாகணும்
: காதல் சாகரம்.. அதில் இன்பத் தோணி போகணும்
பெ: ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்

: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
...

: முத்துமணி மாலை போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்
பெ: பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்
: காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்
பெ: நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்
: மூட மூடவே என்னோட மோகம் ஏறுது
பெ: பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
: தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது

பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா.. பட்டுக் களஞ்சியமே
: தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
...

#247 அந்தியில வானம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
: கூடும் காவிரி.. இவதான் என் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..
பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
...

பெ: கட்டுமரத் தோணி போலக் கட்டழகன் உங்க மேல
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவையில்ல.. முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
: பாலூட்டும் சங்கு.. அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
பெ: நாணம் உண்டல்லோ.. அதை நானும் கொண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ.. ஹோ..

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

: வெள்ளியலை தாளந்தட்ட.. சொல்லியொரு மேளங்கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா.. ஆ ஆ ஆ..
மல்லியப்பூ மாலை கட்ட.. மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா.. ஆ.. ஆஆஆ..
பெ: கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்
: தேகம் ரெண்டல்லோ.. இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகமொன்று ஜீவனொன்று கூடும் இன்றல்லோ

பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: கூடும் காவிரி.. இவதான் உன் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..

: அந்தியில வானம்
பெ: ஹா..
: தந்தனத்தோம் போடும்
பெ: ஆஹா..
: அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்
: ஹோய்..
பெ: சுந்தரியப் பாரும்
: ஆஹா..
பெ: சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

#246 கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ.குழு: பாபப பாபப..
: தாதத தாதத..
பெ.குழு: நீநிநி நீநிநி..
: ஸாஸஸ ஸாஸஸ..
பெ.குழு: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
: தப நித ஸாநி ரிஸ ரிகமப
பெ.குழு: தப நித ஸாநி ரிஸ நிதபம பா..
...
: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: அம்பா சாம்பவி சந்த்ரமௌலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவாத்ரிநயனா காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயௌவனா சுபஹரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
...

: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றஞ்சொல்லுமா
பெ: கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ்சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
: வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
பெ: சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது

: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
 கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: பூவே.. பெண் பூவே
இதிலென்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா
...
பெ: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
: உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பமெல்லாமே இருவருக்கும்
பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
: ரெண்டா.. ஏது.. ஒன்றுபட்டபோது

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
: கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி





: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
பெ: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
பெ: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்
: வந்துவிட்டேன்.. மெல்ல மெல்ல
பெ: தந்துவிட்டேன்.. என்ன சொல்ல
: பாவமல்ல.. வேதங்கள் தடையல்ல

: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
பெ: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
பெ: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்
: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெ: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
: கட்டிப் பிடி..
பெ: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா
...
&பெ: காதல்தானே ஜெயிக்குது

: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்.. சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
...

#244 புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா



புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

என்னென்ன தடை வந்தபோதும் காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை மறைப்பதில்லை
காலமின்னும் கூடவில்லை.. மாலையின்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்றபோதும் உன்னை நினைத்திருப்பேன்
தேவனே காத்திருப்பேன்.. தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன்.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ.குழு: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ம்ம் ம்ஹும்..
...
பெ: ஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா

ஆ: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆ. ஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
தனன தீம்த திரனா.. தன திரன.. தனன தீம்த திரனா.. தன திரன..
தனன தீம்த திரனா.. தன திரனா.. தா.. ஆஆஆ ஆ..
...

பெ: முன் வைத்த காலைப் பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா
: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிக்கின்றதா
பெ: அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா
: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெ: ஜீவன் தவிக்கின்றதா.. தேகம் கொதிக்கின்றதா

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆ..
...
: கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
பெ.குழு: ஸதகரி ஸதகரி நிதபம கமகம பதநித ககபம கரிஸத ரிரிஸ கரிமக பா
ரிரிஸ கரிமக பா
பெ: காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
: நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
பெ: காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
: பெண்மை சிலிர்க்கின்றதோ.. பேசத் தவிக்கின்றதோ

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
பெ: ம்ம்ம் ம்ம் ம் ம்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்..
...

#242 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா

படம்: கிளிப்பேச்சு கேட்க வா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்



ஓ.. ஒ ஒ ஓ.. ஓ.. ஒ ஒ ஓ..
ம் ம்ம்.. ம் ம்ம்.. ம் ம்ம்..
...
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன்தானோ
மின்னலென மின்னிவிட்டுக் கண்மறைவாய்ச் சென்றுவிட்ட
மாயம் நீதானோ
உன்னால் வந்த காதல் உன்னால்தானே வாழும்
என்னை நீங்கிப் போனால் உன்னைச் சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்லக் கொல்லுவது
காதல் நோய்தானோ
வைகையெனப் பொய்கையென மையலிலே எண்ணியது
கானல் நீர்தானோ
என்னை நீயும் தூண்ட.. எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட உன்னைத்தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

#241 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா

படம்: கிளிப்பேச்சு கேட்க வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



ஓ.. ஒ ஒ ஓ.. ஓ.. ஒ ஒ ஓ..
ம் ம்ம்.. ம் ம்ம்.. ம் ம்ம்..
...
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

பொற்சதங்கை சத்தமிட.. சிற்பமொன்று பக்கம் வர
ஆசை தோன்றாதோ
விற்புருவம் அம்பு விட.. வட்ட நிலா கிட்ட வர
ஆவல் தூண்டாதோ
வானம் நீங்கி வந்த மின்னற் கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும் தங்கப் பாளம்தானே
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

மந்திரமோ தந்திரமோ.. அந்தரத்தில் வந்து நிற்கும்
தேவி நான்தானே
மன்னவனே உன்னுடைய பொன்னுடலைப் பின்னிக் கொள்ளும்
ஆவி நான்தானே
என்னைச் சேர்ந்த பின்னால் எங்கே போகக் கூடும்
இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும்
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

#240 உருகினேன் உருகினேன் - அண்ணே அண்ணே

படம்: அண்ணே அண்ணே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஹோ.. உருகினேன்..
: உருகினேன்..
...

பெ: பப பபாப பபபபபா.. பப பபாப பபபபபா..
...

: காதல் மோகம் கை கூடுமோ.. கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ.. கண்கள் எழுதும் கனவாகுமோ
பெ: ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது.. உயிரில் உயிராய் இருப்பாள் மாது
: உனையே கோடிக் கோடி ஜென்மம் சேருவேன்

பெ: உருகினேன்..
: உருகினேன்..
பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஹோ..
...

பெ: பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
: மானோ மீனோ கண்விழி.. இந்தப் பெண் விழி
பெ: பபபபா..
: பபப.. ஏதோ எதுவோ சொல்லுதே.. என்னைக் கொல்லுதே
பெ: பபபபா.. உனக்காகப் பிறந்தேன்.. எனை நானே மறந்தேன்
உனக்காகப் பிறந்தேன்.. எனை நானே மறந்தேன்
: மடி மேல் இருத்தி உனைத் தாலாட்டவா

பெ: உருகினேன்..
: உருகினேன்..
பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஓ.. லலலலா..
: ரா பா பா.. ரபபபா..
...

#239 மானாட கொடி பூவாடும் - முதல் வசந்தம்

படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



ஆ.. ஆஆ.. ஆஆ ஆ..
ஆஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ..
ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆ..
...
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்துப் பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...

ஆஆ ஆ.. கால் சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளைத் தாளங்கள் தந்தன்னன்னா.. தானன்னன்னா..
தந்தன்னன்னா.. தானன்னன்னா.. ஓ ஓஓ..
தேரோடும் வண்ண மலை.. நீரோடும் வெள்ளியலை
ஜாடை மின்ன மின்ன.. ஆடை பின்னப் பின்ன.. ஓ ஓ..

மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...

ஆஆஆஆஆ.. வானமென்னும் மேடையிலே வானவில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம் தந்தன்னன்னா.. தானன்னன்னா..
தந்தன்னன்னா.. தானன்னன்னா.. ஓ ஓஓ..
ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள.. வண்ணம் என்ன சொல்ல.. ஓ ஓ..

மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்துப் பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...

#238 கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம்

படம்: மௌனம் சம்மதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா



: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா.. உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
...

: தென்பாண்டிக் கூடலா.. தேவாரப் பாடலா
தீராத ஊடலா.. தேன் சிந்தும் கூடலா
பெ: என்னன்புக் காதலா.. என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா.. நீ தீண்டும் கையிலா
: பார்ப்போமே ஆவலா.. வா வா நிலா..

பெ: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
: நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
...

பெ: உன் தேகம் தேக்கிலா.. தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா.. நான் கைதிக் கூண்டிலா
: சங்கீதம் பாட்டிலா.. நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா.. உன் பார்வை தன்னிலா
பெ: தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா..

: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
பெ: தேயாத வெண்ணிலா.. உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
...

#237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & மின்மினி



: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
...

: பூங்காத்து வீசுது.. அனலைப் பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
பெ: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
: சேலை கட்டும் நந்தவனம் நீயா.. செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
பெ: கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா.. சின்ன இடை தேய்வதென்ன நோயா
: கட்டியணைச்சா.. முத்தம் பதிச்சா.. நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா.. ஹோ..

பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

பெ.குழு: துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு..
துரு ருருருருருரு ருரு.. துரு ருரு ருருருருருரு..
துரு ருரு ருருருருருரு..
...
பெ: கல்யாண மாப்பிள்ளை.. எனை நீ பார்க்கலை.. கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
: ஊரெங்கும் தோரணம்.. நடக்கும் ஊர்வலம்.. உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெ: அந்தியிலே சந்தனத்தைப் பூச.. ஆசைகளைக் கண்களிலே பேச
: சேலையிலே நீ விசிறி வீச.. காலையிலே பார்த்த கண்ணுக் கூச
பெ: என்ன சுகமோ.. எப்ப வருமோ.. என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை.. ஓ..

: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
பெ: மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
: மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
: மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

#236 மானே மரகதமே - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & எஸ். ஜானகி



: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே..
...

: நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பெ: பூவும் வெச்சு.. பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
: பாசம் வச்சு பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி
பெ: உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்
: மனசுக்குள் கோயில் கட்டி மகராசி உன்ன வச்சு
பொழுதானா பூசை பண்ணி வாழுறேன்

பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
பெ: பனி தூவும் மாலை வேளைதான்
: மானே.. மரகதமே..
...

பெ: ராகம் வெச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
: மோகம் வெச்சு கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது
பெ: தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது.. நன்னாளிது
: நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில்தானடி கண்கள் உன்னைக் காணுது
பெ: அழகான தென்னஞ்சிட்டே.. இனிமேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
பெ: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
: பனி தூவும் மாலை வேளைதான்
பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது
: தென்றல் தமிழ் பாடுது

#235 கண்ணே இன்று கல்யாணக் கதை - ஆணழகன்

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
...
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

பெ.குழு: ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
...
ஆ1: கோடைக்கானல் சாரலில்..
ஆ2: ஆ.. ஆ.. ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆ1: கோடைக்கானல் சாரலில் குறிஞ்சியொன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது
பெ: ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: உள்ளது யாவும் என்னைச் சேர்ந்த சீதனம்
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: உன்னால் சின்னச் சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆ1: பெண்ணே.. தமிழ்ப் பண்ணே.. இன்று சொல்வாய் புது ராகமே

பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
பெ: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
ஆ1: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
பெ: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று
பெ: ஆ..
...

பெ.குழு: தகதத்தம் தத்தகதம் தகதத்தம்.. தகதத்தம் தத்தகதம் தகதத்தம்..
...
பெ: நீயில்லாத நாளெல்லாம்..
பெ.குழு: ஆ.. ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆ..
பெ: நீயில்லாத நாளெல்லாம் நெருஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆ1: எத்தனை காலம் பாவம் இந்தத் தொல்லையோ
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: கற்பகச் சோலை காய்ந்திடாமல் நீர் விடு
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: வந்தேன்.. என்னைத் தந்தேன்.. உன்னைக் கொண்டேன்.. இது போதுமா
பெ: தொட்டால்.. விரல் பட்டால்.. நெஞ்சின் உள்ளே அலைமோதுமா

ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

#234 மானே நானே சரணம் - செந்தூர பாண்டி

படம்: செந்தூர பாண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஸ்வர்ணலதா



: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: ஆடை நனைந்திருக்க.. ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி.. காளைக் கன்று வாலை மெல்ல ஆட்டாதா
பெ: தேகம் தழுவியொரு யாகம் செய்யக் கூடாதா
காதோரம் கன்னிப் பூவும் காதல் வேதம் ஓதாதா
: மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்லப் பாய
பெ: மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய
: புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப் பொழுதில்

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா
பெ: பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான்தானே உன்னையெண்ணி சிந்திக்காத நாளுண்டா
: ஆகாயம் பொத்துக் கொண்டு தண்ணீர் விடும்போது
பெ: ஆகாது என்று சொல்லும் தோட்டம் இங்கு ஏது
: ஒரு பாதி குளிர்ந்ததென்ன.. மறு பாதி கொதிப்பதென்ன

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...