#287 செம்பூவே பூவே உன் மேகம் நான் - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: இமைகளும் உதடுகளாகுமோ..
பெ: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

: அந்திச் சூரியனும் குன்றில் சாய.. மேகம் வந்து கச்சையாகக்
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெ: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
பெ: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெ: கட்டிலும் கால் வலி கொள்ளாதோ.. கைவளை கைவளை கீறியதோ

: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

பெ: இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
: அந்தக் காமனம்பு என்னைச் சுட்டு.. பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்.. சேலைப் பொன் பூவே
பெ: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெ: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
: பாயாகும் மடி.. சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே

பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: இமைகளும் உதடுகளாகுமோ..
: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

#286 ஆலோலம்கிளி தோப்பிலே - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ.குழு: ஹே.. ஹேலலா லாலா லாலலா..
லாலாலா லாலாலா.. லாலாலா லாலாலா..
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

: கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ.. ஹோய்..
பெ: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ.. ஓ..
: காதல் விழாக்காலம் கைகளில் வா வா.. ஈர நிலாப் பெண்ணே
பெ: தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல்.. ஆடி வா
: வீணை புது வீணை.. சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

பெ: கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ.. ஓ..
: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ.. ஹோய்..
பெ: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
: நிலாவின் பிள்ளையிங்கு நீதானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ
பெ: ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா.. புதுக் காதல் குறுந்தொகையா

: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்குமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

#285 மன்னன் கூரைச்சேலை - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல்தானோ.. இனி பூமழையும் கொஞ்சுந்தேனோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

பெ.குழு: தனன தீரனன தானன தானா.. தனன தீரனன தானன தானா..
தனன திரனனனன.. தனதிரனா.. தா.. திரனனன நா நா..
...
பெ: செந்துரப் பொட்டிட்டேன்.. ஒளிப் பொன்வளை கையிலணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை
சாமத்தில் பூஜைக்கு உயிர்த் திரியில் விளக்கு கொளுத்தி
நான் வைப்பேன் என் மன்னன் பேரைச் சொல்லி
பிள்ளைச் செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நித்தம் பள்ளிப் பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நாளும் பொழுதும் உள்ளமிளைத்தேன் என்னைத் தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளித் தூவும் முன்பே நீ
வள்ளல் போல் கண்ணா வா

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

: ஏ.. ஹேஹேஹேஹே.. தேனெடுத்து வச்சிருக்கும் தேனீ
ஆ.குழு: ஓஹோ..
: மறு பெளர்ணமிக்குள் தேன் குடிக்கும் பார் நீ
ஆ.குழு: ஓஹோ..
: அடி குயில்கள் பாடும் நாள் வந்தா..
ஆ.குழு: அடி குலவைச் சத்தம் கேட்காதா
: உன் தவிக்கும் துயரம் தீர்க்கதான்
ஆ.குழு: அவன் காலடிச் சத்தம் கேட்காதா
...

பெ: பட்டாடை மேலெல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு
நாள்தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்க்கையில் தாவணி வீசி
இனி நாள்தோறும் தாலாட்டும் தாயும் நான்தான்
தீயில் தீரும் மோகங்கள்.. நீரில் தீரா தாகங்கள்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்திடுமா
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வுங் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே மெத்தையிடும் நாள்தான் தாகங்கள் பூச்சுடும்

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

#284 சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எம்.ஜி.ஶ்ரீகுமார் & சித்ரா

: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
ஆ.குழு: சித்திரப் பூவே.. பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா
: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
...

பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ.. ஓஓஓ..
ஓஓஓ.. ஓஓஓ..
...
: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெ: மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்
: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெ: மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்
: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
பெ: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
: என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே.. பிரியமே.. சகி....

பெ: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
பெ: சுட்டும் சுடர்விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா
: தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே
...

பெ.குழு: ஓ.. ஓஓ ஓ.. ஓ.. ஓஹொஹோ.. ஓ.. ஹொஹொஹோ..
ஓஹொஹோ.. ஓஹொஹோ.. ஓ..
...
பெ: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
பெ: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
பெ: விண்ணுலகம் எரியுதே.. பெளர்ணமி தாங்குமா
: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ
பெ: கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
...

#283 தம்தன நம்தன தாளம் வரும் - புதிய வார்ப்புகள்

படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: ஜென்சி, வசந்தா & குழுவினர்

பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
பெ1: தம்தன நம்தன தாளம் வரும்.. புது ராகம் வரும்.. பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ2: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
...

பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ2: பெண் மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
ஆ..
...
பெ2: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ2: சிந்திய பூ மலர் சிந்திவிழ.. அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்த்தது சந்திரனோ.. சந்திரன் போலொரு இந்திரனோ
பெ1: முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர.. சுவை பெற

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
...