#299 ஓ.. எந்தன் வாழ்விலே - உனக்காகவே வாழ்கிறேன்

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

பண்ணோடு நாளும் இணையும் தாளம்
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
கல்யாண ராகம் விழிகள் பாடும்
கால் போடும் கோலம் கவிதையாகும்
சந்தோஷத் தென்றல் என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்
அன்பாலே.. அன்பாலே பண் பாடி
உன் நிழலென வருவேன்

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

செந்தாழம்பூவே கதைகள் பேசு
சிங்காரக் காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காகத்தானே இதயம் என்றான்
நானந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே.. விழாவே கொண்டாட
கண் மயங்குது கிளியே

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

#298 சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆஆஆஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ.. ஆ..

தம்நம்த நம்த நம்தம் நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்.. நம்த நம்தம்.. நம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
...

திருமுகம் வந்து பழகுமோ.. அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ.. அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி..
விழிகள் அழுதபடி.. கரங்கள் தொழுதபடி..
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி
இசை எனும் மழை வரும்.. இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்.. காதலின் வேதங்கள் ஆடிடுமோ.. பாடிடுமோ..
ஆடிடுமோ.. பாடிடுமோ..

ராஜ தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்..
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே..

ஸஸஸஸ நிஸநிஸ நிஸரிஸ நிஸநிஸ
கரிஸநி ரிஸநிஸ பதநிஸ ரி
ரிஸரிக ஸகரிக நிஸரி நிஸரி
ஸநிதப தஸநி ஸநிதப மபதப
ஸா நிஸநி நிஸநி நிஸநி தப
ப மகப நி தஸநி தபமப
ஸரிக ஸரிக நிஸரிகரிகமப கமப கமப மபத பதநி
நித நிஸ ஸநி தநி
பதநி ஸககக ஸநிஸரி.. கரிஸநி.. ஸநித நிதப
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தரிகிடதோம்..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
...

#297 காதல் உன் லீலையா - ஜப்பானில் கல்யாணராமன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

லாலா லாலா லாலா லால லாலா.. லாலலா..
லாலா லாலா லாலா.. லாலா லாலலா..
காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...

வெள்ளை நிலா வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்.. கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்.. எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்

இந்தக் காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
...

ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான்
கோதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைதான்
வெட்கம் இன்று தீராதா.. முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டிப் பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா

அட காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...

#296 பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


லா.. லாலாலலா.. ஹே.. ஆஹாஹஹா..
ம்.. ம்ஹுஹுஹும்.. ஆஹா.. ஜுஜுஜுஜூ..
லாலாலா.. லாலாலா.. லாலாலா.. லலலா..
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன் hee hee
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
...
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
ம்ஹும்ஹும்.. லால லல ரரரரா..
லலலா லாலலல லாலாலா
whistling
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்..
...

#295 பன்னீரில் நனைந்த பூக்கள் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: நானும் ஓர் தென்றல்தான்.. ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்.. மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: பொங்கும் போதைதான்.. எங்கும் மாயம்தான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: எல்லாம் தேவனின் சொந்தம்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஒன்றே ஜாதிதான்.. ஒன்றே நீதிதான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம் தம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது.. வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே மாதவா.. ஹரே ஶ்ரீதரா..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே ராகவா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆஆஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆ..
...

#294 தேனூறும் ராகம் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆரிராரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரோ.. ஆரிராரிரோ..
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஆடாத தீபந்தான் என் இல்லம்
பூங்காற்றுக்கும் தாங்காது என்னுள்ளம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே.. கனவுகளே..
இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும்.. கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
ராரிராரோ.. ஆரிராரிரோ..
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஷ்ஷ்ஷ்..don't tell anyone
...

ஆகாயம் மண் மீது வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம்.. கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரிராரோ.. ம்ஹுஹுஹுஹும்..
ம்ஹுஹுஹும்.. லாலாலாலலா..